Showing posts with label அருளுரை. Show all posts
Showing posts with label அருளுரை. Show all posts

Sunday, 3 January 2021

ஏன் ஒருவர் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்?

ஏன் ஒருவர் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994


“தற்போது, தன்னை பக்தனாக கூறிக்கொள்ளும் எவராயினும் மாமிச உணவை கட்டாயம் கைவிட வேண்டும். 

காரணம் என்ன?

மிருகங்களின் மாமிசம் உங்களில் மிருக குணத்தையே வளர்க்கும். 

'உணவு எப்படியோ அப்படியே மனம்', 'உணவை சார்ந்தே ஏப்பம்' என சொல்வார்கள்.

மாம்பழத்தை உண்டால் வெள்ளரி ஏப்பம் வராது.

மிருக மாமிசத்தை உண்ணும்போது, உங்களில் மிருகத் தன்மையே மேலும் வளரும்.

அதுமட்டுமல்ல..

நம்மில் இருக்கும் அதே பஞ்ச பூதங்களை தன்னில் கொண்டிருக்கும் மிருகங்களை கொல்வது எத்தனை பாபம்? உன்னில் பஞ்ச பூதங்கள் இருக்கிறது. அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட மற்றொரு உயிரைக் கொல்வது பாபமே.

அப்படிப்பட்ட பாவத்தை செய்வதாலேயே எல்லா வகையான கவலைகள் ஏற்படுகின்றன.

எனவே, உண்மையான பக்தர்கள், பக்தர்களாக ஆக விரும்புபவர்கள் மாமிச உணவை கைவிட வேண்டும். 

'நான் சாயி பக்தன்', 'நான் ராம பக்தன்' எனக் கூறிவிட்டு சிக்கனை ஒரு வெட்டு வெட்டுகிறாய்! நீ எப்படி பக்தனாவாய்? நீ எப்படி உண்மையான பக்தனாவாய்? இல்லை நீ ஒரு ராட்சசனே. அப்படிப்பட்ட மனிதன் இறைவனின் அருளை எப்போதும் பெற மாட்டான். 

எனவே, ஸ்வாமியின் மீது பக்தி கொண்டவர்கள், அவர்கள் பாரதீயர்களோ, வெளி தேசத்தவர்களோ, அவர்கள் நிச்சயம் அசைவ உணவை விட்டுவிட வேண்டும்!"
________

மேற்கண்ட அருளுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/UDxhhcm_6gk

நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel

ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்?

ஏன் ஒருவர் மதுபானம் அருந்துவதை விட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994


“நாம் நீர் அருந்துகிறோம். நீரில் உயிர் இருக்கிறது. நீரில் சக்தி இருக்கிறது. நீர் தெய்வீகத்தின் ஒரு பொறி! இது சங்கரனின் ஜடாமுடியில் இருந்து உற்பத்தி ஆகிறது. அதனை அருந்தாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.

போதைவஸ்து மிகவும் தவறானது. அது ஒருவனை தன்னை மறக்கச் செய்யும். அது சுயமரியாதையை இழக்கச் செய்யும். மனித பண்பு மறைந்துவிடும். தெய்வீகம் மறந்துவிடும். அவன் என்ன சொல்கிறான் அல்லது என்ன செய்கிறான் என்பதை அறியான். இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டே இருப்பான். அப்படிப்பட்டவனை பார்ப்பது எவ்வளவு அவமானம்? மனித பிறப்பெடுத்து, எப்படி இவ்வாறு நடந்து கொள்ள முடிகிறது என நாம் கேள்விகளால் அவனை துளைக்க வேண்டும். இது நல்லதல்ல. இதனால் குடும்பங்கள் பாழாகிவிடும். அனைத்து பணத்தையும் மது அருந்துவதிலேயே செலவு செய்கிறான் மேலும் அவனால் அவனது குடும்பத்தை பராமரிக்க இயலாது. இத்தனை செல்வங்களைக் கொண்டு உன் பெற்றோரையும் குடும்பத்தையும் பராமரிக்க இயலவில்லை என்றால் அதனால் பயன் என்ன? இதன் முக்கிய காரணம் என்ன? மது அருந்துவதே!
________

மேற்கண்ட அருளுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/nv696jb1YG0

நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel

ஏன் ஒருவர் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்?

ஏன் ஒருவர் புகைபிடிப்பதை கைவிட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994


“மதுபானதுடன் சிலர் சிகரெட் புகைக்கின்றனர். புகைபிடிப்பதின் காரணமாக மக்கள் உடல் நலம் குன்றுகின்றனர். புகைபிடிப்பதன் காரணமாக ஆஸ்துமா, ஈஸினோபிலியா (Eosinophilia) மற்றும் இதய குறைபாடுகள் ஏற்படுகிறது. உண்மையில் புகையை உள்ளிழுப்பதால் புற்றுநோய்க்கும் ஆளாகின்றனர்.

இதனை நீங்களே சோதித்து பார்க்கலாம். வெள்ளை துணி ஒன்றினை எடுத்து அதில் புகையினை ஊதிப் பாருங்கள். அந்த வெள்ளை துணியில் கறை படிந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

ஒரு துணியே இவ்வளவு பாதிப்பு அடையும்போது, இரத்த நாளங்கள் அடையும் பாதிப்பை எண்ணி பாருங்கள்.

புகைப்பிடிப்பதால் ஆரோக்கியம் முற்றிலும் போய்விடும், வாழ்நாள் குறைந்துவிடும்."
________

மேற்கண்ட அறிவுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/e0O79-u7gWA

நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel

Saturday, 2 January 2021

தீயதை ஒழிக்க நன்மையை பெருக்கு!

தீயதை ஒழிக்க நன்மையை பெருக்கு!

த்ரயி பிருந்தாவனில் மாணவர்களுடன் பகவான்; அப்போது கையில் ஒரு கடித்துடன் ஒரு மாணவன் ஸ்வாமியிடம் பல்வேறு தீய எண்ணங்கள் அவனை தொல்லை செய்வதாக கூறினான். அவனது பிரச்சனைகள் அனைத்தையும் அக்கடிதத்தில் எழுதி இருந்தான். ஸ்வாமி ஒரு வார்த்தையும் உரைக்கவில்லை. வெறுமே அக் கடித்ததை வாங்கி அதனை திறந்தார், பின் அதனை சுருட்டி மீண்டும் அதனை அம்மாணவனிடம் கொடுத்தார். 

ஸ்வாமி அம்மாணவனிடம் சுருட்டிய அக்கடிதத்தை திறக்க சொன்னார், அம்மாணவனும் முயற்சித்தான். 

நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். சுருட்டிய  நிலையில் இருக்கும் புதிய காலண்டரை திறக்கும் போது அது நேராகாமல் மீண்டும் சுருட்டிக் கொள்ளும். 
அம்மாணவன் இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பயனில்லை. பகவான் அக்கடித்ததை திரும்பப் பெற்றுக்கொண்டு அதனை மறுபக்கமாக சுருட்டினார். இப்போது அக்கடிதம் நேராகியது! பின்னர் பகவான் அம்மாணவனிடம், "கட்டுபாடில்லா, தவறான எண்ணங்களுடன் போராடுவதற்கு பதிலாக நற்காரியங்களை செய்ய துவங்கு!" என்றுரைத்தார்.

ஆதாரம்: 2012ல் நடைபெற்ற கோடை பயிற்சி முகாமில் திரு. K. M. கணேஷ் அவர்கள் உரையில் இருந்து.

Friday, 20 March 2020

வாகனத்தை பராமரித்தல் - பகவான் பாபாவின் அருளுரை

வாகனத்தை பராமரித்தல் 




        தவறான உணவுப் பழக்கங்களாலும், மூடத்தனமான வழிகளில் ஓய்வு நேரத்தை செலவழிப்பதாலும் நோய்கள் வருவதாக மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உணவு என்பது, பலவகைகளில் உள்ளே செல்வது அனைத்தையும் குறிக்கும் சொல் என்பதை அவர்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. எந்த புலன்கள் மூலம் அனுபவிக்கும் எந்த அனுபவமும், உணவு எனப்படும். அது மனிதனின் உடல் நலத்தைப் பாத்திக்கவல்லது. ‘சிந்தனை உணவு’ (food for thought) என நாம் கூறுகிறோம்; நாம் என்ன பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், தொட்டாலும் அது உடலுக்கு நல்லதாகவோ, கெட்டதாகவோ பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரத்தத்தைக் கண்டதும் சிலருக்கு மயக்கம் வருகிறது. கெட்ட செய்தி அதிர்ச்சியை உருவாக்குகிறது. விருப்பமில்லாததை நுகர்ந்தாலோ, வேண்டாததை தொட்டாலோ, சுவைத்தாலோ அலர்ஜி உண்டாகிறது. ஆரோகியமான மனமே ஆரோக்கியமான உடலை தரும்; ஆரோக்கியமான உடல் ஆரோக்கியமான மனதை கொடுக்கும். இரண்டும் ஒன்றுக்கொன்று பரஸ்பரத் தொடர்பு கொண்டது. மகிழ்சிக்கு உடல் நலம் அவசியம்; மகிழ்சியோ, எது நிகழ்ந்தாலும், மகிழ்ச்சியுடன் இருக்கும் வல்லமையோ உடல் நலத்துக்கு மிக அவசியம்.

       நாம் உண்ணும் உணவு சுவை உள்ளதாக, போஷிப்பதாக, இனிமையுள்ளதாக இருக்க வேண்டும். அது மிகக்காரமாக, மிக உப்புக்கரிப்பதாக இருக்கக் கூடாது. அது சமச்சீரான நிதானத்துடன் இருக்க வேண்டும். அது உணர்வுகளைத் தூண்டவும் கூடாது. மலுங்கச் செய்யவும் கூடாது. ராஜஸிக உணவு உணர்ச்சிகளைத் தூண்டி தீவிரமாக்குகிறது. தாமஸிக உணவு, சோம்பலையும், தூக்கத்தையும் வரவழைக்கிறது. சாத்விக உணவு திருப்தி செய்வதுடன், ஆசைகளைத் தூண்டுவதில்லை, உணர்ச்சிகளைத் தீவிரமாக்குவதில்லை.

ஐந்து வித நீராடல்

      இயற்கை தனது அமைப்பில் பல்வேறு மர்மங்களைக் கொண்டுள்ளது. தனது ஐம்புலன்களால் கண்டுக்கொள்ளக் கூடியவற்றின் சிக்கல்களை மட்டுமே மனிதனால் அவிழ்க்க இயலும். தன்னிடம் உள்ள குறைபாடுள்ள ஐம்புலன்களின் எல்லைக்கப்பால் பரந்து விரிந்த மாபெரும் சாம்ராஜ்யம் உள்ளது என்பதை அவன் அறிந்துணரவில்லை. உதாரணமாக ஒவ்வொரு உயிரிலிருந்தும் பொருளிலிருந்தும் லட்சக்கணக்கான நுண்துகள்களும், லட்சக்கணக்கான அதிர்வுகளும் இடைவெளியில்லாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கற்பூரம் போன்ற பொருட்கள் மிக அதிகமான அளவில் இவற்றை வெளியிடுவதால், ஒரு கட்டி சில நாட்களில் கரைகிறது. பிறரது உடல்கள் இந்த வெளியிடுதல்கள் மூலமாக நம்மை பாதிக்கின்றன. நாமும் அதே விதமாக பிறரை பாதிக்கிறோம். நல்லதற்கோ கெட்டதற்கோ பரஸ்பரம் தவிர்க்க இயலாது பாதித்துக்கொண்டே இருக்கிறோம். இவ்விதத் தொடர்பினாலும் நாம் வளர்த்துக் கொள்கின்ற சகவாசத்தினாலும் நாம் உடல் வளர்ச்சியும், அத்துடன் கூட ஆரோக்கியமும் வலிமையும் பாதிக்கப்படுவது இயற்கையே. அழுக்கு சேரும் போதோ, கழிவுப்பொருள் சேர்ந்து கொள்ளும் போதோ, சாக்கடைகள் அடைத்துக்கொள்ளும் போதோ, இந்த வெளிப்படுதல்கள் (emanations) தீவிரமாகின்றன. இத்தகைய பகுதிகளில் இருந்து வியாதிகள் பரவுவதைத்தடுக்க, சுகாதார விதிகள் உருவாக்கப்படுகின்றன.

       இத்தகைய பிறரின் வெளிப்படுதல்களிலிருந்து நமது உடலின் தடுப்புசக்தியை காத்துப்பராமரிப்பதற்காக, நமது மறை நூல்களில் ஐந்து விதமான குளியல்களை பரிந்துரைகிறது. முதலாவதாக ‘மண் குளியல்’, நுட்பமான மண்துகள் உடல் முழுவதும் பூசப்பட்டு, சிறிது நேரம் அவ்வாறே உடலில் வைத்திருந்து பிறகு அந்த மண் துகள் நீரால் கழுவப்படுகிறது. இரண்டாவது ‘சூரியக் குளியல்’ (Sun Bath), சூரிய கிரணங்கள் வலுவான கிருமி நாசினிகள் என்பதால், இந்தக் குளியல் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குளியல் உடலுக்கு உரமூட்டுவதுடன் புத்துணர்வும் தருகிறது. மூன்றாவது ‘தண்ணீர்க் குளியல்’, ஓடும் நதி புனிதமாகக் கருதப்படுகிறது. மந்திரங்கள் கூறி நீராடும் போது, அகம் புறம் இரண்டுமே தூய்மையடைகின்றன. நாங்காவது ‘காற்றுக் குளியல்’ (Air Bath), உடல் முழுவதும் குளிர்ந்த காற்று படுகிறது. அதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது. ஐந்தாவது குளியல், ‘விபூதிக் குளியல்’, சிவனை நினைந்து உடல் முழுவதும் விபூதி பூசப்படுகிறது. பிறரிடமிருந்து வரும் அதிர்வுகளின் தீய பாதிப்பையும், தீய தொடர்புகளால் வரும் தீய பாதிப்பையும் உடல் பெறாதவாறு காக்கிறது. விபூதி அணிந்து மனிதனின் அதிர்வுகளையும் தூய்மைப்படுத்தி புனிதப்படுத்துகிறது. தானேயாகிய இறைவனைத் தவிர, தான் என்று கருதிய பிற அனைத்தும் அழிவது உறுதி என்பதை அவனுக்கு நினைவூட்டுகிறது.

அசுத்தத் தன்மை பொது ஜனப்பழக்கமாகவே மாறிவிட்டது

      தீண்டாமை என்ற சமூகப்பழக்கத்துக்கு இந்த உண்மையை அறிந்து உணர்ந்ததே, பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டும். தம்மைத் தாழ்ச்சியுறச் செய்கின்ற, அசுத்தப்படுத்துகின்ற மனிதருடனோ, பொருட்களுடனோ தொடர்பினைத் தவிர்ப்பது போன்ற பழக்கங்கள் நாளடைவில் அர்த்தமற்ற வாழ்வை மறுதலிக்கின்ற, பின்னிழுக்கும் சடங்குகளாக மாறிவிட்டன. இத்தகைய கட்டுப்பாடுகளையும், விலக்குகளையும் அனுசரிப்பதால் ஏளனத்துக்குள்ளாக்கும் மக்களுக்கு இவற்றின் உட்பொருட்சிறப்பை விளக்கிக் கூறுவது கடினமாக உள்ளது. தனது குறிக்கோளை அடைவதற்கு நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெற வேண்டுமென்று சாதகன் இத்தகைய பழக்க வழக்கங்களை மேற்கொள்கின்றான். “யுக்தா ஹாரா விஹாரஸ்ய”, கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட உணவுப் பழக்கங்களும் ஓய்வுப்பழக்கங்களும் என்பது பற்றி கீதை கூறுகிறது. உணவின் தூலப்பகுதி மலமாக வெளியே தள்ளப்படுகிறது. அதன் சூக்க்ஷும பகுதி தசை, இரத்தம் இன்னும் பிறவாக மாற்றப்படுகிறது. அதிசூக்க்ஷும பகுதி மனதாகவும் அதன் செயற்பாடுகளாகவும் மாற்றப்படுகிறது. அதனால்தான் ஆன்மிக உந்துதல்களைத் தடுக்கவும் உணவுக்கு சில வரையறைகளும், சில படித்தரங்களும் வகுத்தனர்.

       ஆனால் இக்காலத்தில், அதர்மம் நிறைந்த கலியின் பிரபாவத்தால், ஆன்மிக உந்துதலைப் பாழடிக்கும் உணவு அதிகமான அளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புதுமை, புதிய ஆன்மிகம் என்ற பெயரில் தனிமனிதனின் சுத்தத்தின் அடிப்படை விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. குளியலைப் பற்றி கவனிப்பதே இல்லை. பற்களைப் பராமரிப்பது இல்லை. கெடுதல் தரும் பழக்கங்கள் மலிந்து, சகித்துக்கொள்ளப்படுகின்றன. உடல் எனும் மாளிகைக்கு வாய்தான் நுழைவுவாயில். உள்ளே வசிப்போரைப் பற்றியும் கூற என்ன இருக்கிறது? அசுத்தத் தன்மை பொதுஜனப் பழக்கமாகிவிட்டது. அதனை ஆராதிப்பவரிடமிருந்து விலகி நிற்பதே நல்லது. ஏனெனில் சுத்தம், கடவுளுக்கு அடுத்த நிலையில் உள்ளது. தலைமுடி சீவாமல், முடிகலைந்து அழுக்கான தலைகளும் உடல்களும், கலைந்து, சீரில்லாத புத்திகளையும் மனங்களையும் குறிக்கின்றன.

குணசீலம் சிறப்பாக இருந்தால், உடல் ஒளி வீசும்

      பல முனிவர்களும் அருட்தொண்டர்களும் எப்போதுமே மெய்யியல்புக்கு (Reality) மிக அருகில் உள்ள படித்தரத்தில் நிலைபெற்று இருந்தால் உடல் சுத்தத்தைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பது உண்மைதான். தான் உடலல்ல என்ற அக உறுதிப்பாட்டு நம்பிக்கை இல்லாமல் அவர்களைப் போல நடத்தல், வெறும் வெளிவேஷமும் பாசாங்குமாகும். கடலிலிருந்து வெளிவந்த நஞ்சினை உண்டார் ஈடுவரன். ஆனால் சாதாரண மனிதர்கள் உலகத்தின் சிறு நஞ்சுகளைக் கூட நீக்க இயலாத நிலையில், இறைவன் போல நடத்தல் இயலாத காரியம். சாந்த சமநிலையை வளர்த்துக் கொள். இறை நம்பிக்கையை மனதில் நிலை நிறுத்திக்கொள்; அப்போது துணிச்சலுடன், தவறான விளைவுகள் இல்லாமல், உடலின் கோரிக்கைகளை புறக்கணிக்க உரிமை பெறுகிறாய். முனிவர்களின் ஞானத்துக்குச் சவால் விடுதலும், நானும் அவ்வாறு நடந்து கொண்டால் என்ன கெடுதல் விளையும் என்று கேட்டலும் இயலாத காரியம். பெரிதாக உப்பிய அகங்காரத்துடன் ஆன்மிக சாம்ராஜ்யத்துக்குள் துணிந்து செல்லும் போது பெருங்கெடுதல் விளையும்.

        உடல் பரிவுடனும் கவனத்துடனும் போஷிக்கப்பட வேண்டும். அதுபோற்றற்குரிய கடமைப் பணியை சாதிப்பதற்கு கொடுக்கப்பட்ட மிகச் சிக்கலான நங்கு இசைந்து இயங்குகின்ற இயந்திரமும் பெறற்கரிய நங்கொடையும் உடலே. அதன் வெளிப்புறம் சுத்தமாகவும், நல்லதன் வசீகரம் நிறைந்தும் இருக்க வேண்டும். ஆனந்தம் எனும் பழத்தின் தோல்தான் இந்த உடல். அதன் சதைப்பற்றுதான் சதையும்,எலும்பும், நரம்பும். உண்ண இயலாத கடினமான விதைதான், வாழ்கையில் கலந்து கொள்கின்ற தீமை. எந்த நோக்கத்துக்கு மரம் நடப்பட்டு போஷிக்கப்பட்டதோ, அந்த பழரசந்தான் அது எல்லோரிடனும் பகிர்ந்து கொள்ளும் ஆனந்தம். குணசீலம் சிறப்பாக இருந்தால், உடல் ஒளிவீசும். மனிதனுக்கு சேவை செய்தலும், இறைவனை வழிபடுதலும் அதன் வசீகரத்தைப் பாதுகாக்கும். மனிதனின் மிக அற்பமான செயலில் கூட, அதனை இனிமைப்படுத்துகின்ற தன்னலமற்ற அன்பின் சுவடாவது காணப்படுகிறதா என்று இறைவன் ஆயிரம் கண்களுடன் கவனித்துக் கொண்டிருப்பார்.

       பண்டைக்காலத்தில், வியாதிகள் இயற்கை தந்த எளிய நிவாரணிகளான வேர்கள், கிழங்குகள், பழங்கள், இலைகள் போன்றவைகளாலும் ஓய்வு, வீடு மாற்றம், உணவுப் பத்தியம், ஆன்மிகப் பயிற்சி இன்ன பிறவற்றால் குணம் பெற்றன. ஆனால் இப்போது மாத்திரைகளையும், மருந்தூசிகளையும் கொண்டு பிழைக்கிறான். மருத்துவர்கள் மூலம்தான் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது என்றோ, மருந்துகள்தான் அதற்கு உத்தரவாதம் தருகின்றது என்றோ நம்பாதீர்கள். அவ்வாறிருந்தால் இறந்தவர்களெல்லாம் இப்போது உயிருடன் இருப்பார்கள். பிறருக்குத் தருகின்ற அறிவுரையை மருத்துவர்கள் தாமே பின்பற்றுகிறார்களா என்று சோதித்துப் பாருங்கள். பிறருக்கு கெடுதல் என்று எந்த பழக்கங்களை கூறுகிறார்களோ, அவற்றிற்கு அவர்களே அடிமையாக இருக்கிறார்கள். புகைத்தலும், மது அருந்துதலும் உடலுக்கு அபாயம் என்று எச்சரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அவற்றில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்கள் பழிக்கும் தீமைக்கு அவர்களே ஊக்கந்தருகிறார்கள்.

      இத்தகைய மருத்துவ ஆலோசகர்கள்தான் நம்மிடம் இருக்கிறார்கள். ஒவ்வொரு துறையிலும் ஆன்மிகம், நீதிநெறி, பொருளாதாரம், அரசியல், இலக்கியம் சரியான தலைவர்கள் இல்லாதிருப்பதே, உலகத்தைத் துன்புறுத்துகின்ற மனவேதனை, கவலை, பயம் இவற்றிற்கு மூலகாரணம்.

       நீங்கள் அனைவரும் திவ்யாத்ம வடிவங்கள். பிறர் கண்டுகொள்ள வேண்டுமென்றோ, மதிக்க வேண்டுமென்றோ, தீவிர விருப்பங்கொள்ளாதீர். இறையருள் பெற வேண்டுமென்று தீவிர விருப்பங்கொள்ளுங்கள். அந்தக் குறிக்கோளைப் பின்தொடரும் போது, தடங்கல்களும் இடைஞ்சல்களும் எதிர்பட்டால், அவற்றால் திசைமாறாதீர்கள்.

-    ஸ்ரீ சத்ய சாயி பாபா, பிரசாந்தி நிலையம், 16.10.1974

Wednesday, 27 March 2019

மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள்* 🌺

🌺 மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள் 🌺

_(அனைத்து இந்திய ஶ்ரீ சத்தியசாயி சேவை நிறுவனங்களின் தலைவா் திரு. நிமிஷ் பாண்ட்யா அவா்கள் பெற்ற நோ்முக பேட்டியிலிருந்து)_
----------------------------------------------------------

எனது தந்தை ஒரு நுண்ணறிவுள்ள வழக்கறிஞராக இருந்தவா். விநோதமான நினைவு ஆற்றல் பெற்றவா். ஒருநாள் பிரசாந்தி மந்திரின் தாழ்வாரத்தில் அமா்ந்திருந்த போது ஸ்வாமி அருகே வந்து ஹே பாண்ட்யா உனக்கு என்ன வேண்டுமென்று வினவினாா். எனது தந்தையோ உண்மையாக எதனையும் விரும்பவில்லை. ஏனெனில் அவரது வாழ்வில் அனைத்தும் பெற்றிருந்தாா். எனவேஅவா் எதனையும் கேட்கவில்லை. ஆயினும் அவா் புத்திசாலித்தனத்துடன்விழிப்புணா்வும் கூடியது இது என அவருள் நினைத்து அவா் கூறினாா். ஸ்வாமி எனக்கு மோக்ஷம் வேண்டுமென.நல்லது என்னுடன் வா உள்ளே செல்லலாம் என ஸ்வாமி கூறினாா்.

இவ்வாறு ஸ்வாமி கூறிய பின்னா் ஸ்வாமி வழிகாட்டிட நோ்முக பேட்டி அறைக்குள் நுழைந்தோம். எனது தந்தை அதீதமான  மகிழ்ச்சியுடன் அவருள் எண்ணிணாா். நான் எனது மோக்ஷத்தை நோ்முக பேட்டி அறையினுள் பெறப்போகிறேன் என்று.

ஸ்வாமி அவரை அமரவைத்து என்னிடம் உனது பெயா் கூறு என்றாா்.
எனது தந்தை எங்கு பிறந்தாா்.எனது தந்தையின் தந்தை, அன்னை மற்றும் தந்தையின் மனைவியின் பெயா், மகன்கள் முதலியோா்பற்றி அநேகவிதமான கேள்விகளை கேள்வி மேல் கேள்வியாய் எழுப்பினாா் அதற்கான விடைகளுடன்.100, 200, 300 கேள்விகள்வரை கேட்கப்பட்டன.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி தனது நினைவாற்றலின் சக்தியினை எண்ணி தனக்குள் எனது தந்தை பெருமையடைந்தாா். முடிவாக ஸ்வாமி கூறினாா். இத்தனையிலும் உன் மறவாத தன்மை இருக்கும்போது உனது விடுதலையினை எவ்வாறு பெறுவாய்

*"மோக்ஷம் வேண்டுமெனில் உபயோகமற்றதை நீ மறந்திட வேண்டும், உனது மூளையில் உள்ள தேவையற்ற விஷயங்களை மறந்து காலியாக வைத்திருக்க வேண்டும்."*

கடவுள் மிக எளிமையானவா். ஸ்வாமி மிகமிக எளிய அவதாரம் என்று அவர் எங்களிடம் கூறினாா். நீங்கள்  இவைகளை மறந்திட  முடிந்து இந்த நிமிடங்களில் தடைகள்இன்றி வாழந்திடின் பின்னா் நீங்கள் ஒருமகிழ்ச்சியான  நபராக ஆவீா்கள். உங்களது சுமைகளை சுமந்திருப்பின் நீங்கள் ஒரு இறந்த நபருக்கு ஒப்பானவா் ஆவீா்கள்.

(திரு. கிருஷ்ணன்JS அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)

Friday, 6 November 2015

ஸ்ரீ சத்ய சாயி அருளுரை

"இறை நம்பிக்கை வளர்பதற்கு முதன்மையாக தேவைப்படுவது சத்சங்கம் அல்லது நல்லோரிணக்கம். வேத நூல்கள் சத்சங்கத்தின் மேன்மையை பல உதாரணங்கள் தந்து போற்றி உள்ளனர். ரத்னாகரன் என்ற வழிப்பறி கொள்ளைக்காரன் சப்த ரிஷிகளின் இணக்கத்தால் மனம் மாறி ராமாயண காவியம் படைத்து வால்மீகியானர். இறை சிந்தனையில் ஊறி இருப்போருடன் பழகும் போது பிரார்த்தனையும், நாம ஸ்மரணமும் கைவரப் பெறுகின்றன.அவற்றின் மூலம் இறை நம்பிக்கை வளர்கிறது. பிரார்த்தனை செய்து ஏங்குகின்ற சாதகனுக்கு இறை நம்பிக்கை என்பது ஒரு அறிய வெகுமதியாக கிடைக்க பெறுகிறது"- பகவான் பாபா

Wednesday, 4 August 2010

இரண்டு வழிகள்

" மோட்சத்திற்கான வழி இரண்டுதான். ஒன்று உன் சிறிய 'நானை' எல்லை இல்லாததாக அனந்தமாக விச்தரித்துக்கொள். அல்லது, அதை சுருக்கிக் கொண்டே போய் பூஜ்யமாக்கிக் கொள். முதலில் சொன்னது - ஞானம்; இரண்டாவது - பக்தி!" - ஸ்ரீ சத்ய சாயி பாபா

Saturday, 31 July 2010

அமுத மொழி

" மழை நீரானது எரி,குளம்,கிணறு,ஆறு ஆகியவற்றில் விழுகிறது. அது விழும் இடத்தை பொறுத்தும் அந்த கொள்கலனின் தூய்மையைப் பொறுத்தும், அதன் சுவை,நிறம்,பெயர்,எல்லாம் வேறுபடுகின்றன. தெய்வீக கருணையும் மழையைப் போல் தூய்மையாக மிகத் தெளிவாக எல்லோர் மீதும்படுகிறது. அது எப்படி பெறப்பட்டு பயன்படுகிறது என்பது மனிதனின் இதயத்தைப் பொறுத்து இருக்கிறது" - ஸ்ரீ சத்ய சாயி பாபா

Friday, 30 July 2010

சாயி வாக்கு

" இறைவனின் அருள் சூரிய ஒளிக்கும், மழைக்கும் சமானம். அதை பெற நீங்கள் சில ஆன்மீக சாதனைகள் செய்ய வேண்டும். பானையை நேராக வைத்தால் தான் மழைநீர் அதற்குள் விழும். அது போல் இதயக்கதவை திறப்பதாகிய ஜபம், தியானம் எனும் ஆன்மீக சாதனையை (பயிற்சியை) செய்து சூரிய ஒளியாகிய இறையருளைப் பெற வேண்டும்" - பாபா

Thursday, 29 July 2010

தெய்வத்தின் குரல்

" அருள் எனும் சூரிய ஒளி உங்களை சுற்றி எப்போதும் உள்ளது. ஆனால் அந்த ஒளியின் பயனைப் பெற, நீங்கள் உங்கள் இதயக் கதவுகளை திறந்து வைத்தே ஆக வேண்டும், இது தான் சுய முயற்சி." - பாபா

Wednesday, 28 July 2010

தெய்வத்தின் குரல்

" தியானம், பஜன், யோகா இவற்றை விட தன்னலமற்ற சேவையே ஆன்மிக முன்னேற்றத்திற்கு சிறந்த வழி. ஏனெனில் நாம் செய்யும் தியானம்,ஜபம் மற்றும் யோகம் நம் நலனுக்காக மட்டுமே அன்றி பிறரது நன்மைக்காக அல்ல. இவை தனிப்பட்ட ஒருவரின் மகிழ்ச்சிக்காகவும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவும் செய்யப்படுவன. நாம் பிறர் நலனை விரும்ப வேண்டுமே தவிர சுயநலத்தை மட்டும் விரும்பக்கூடாது" - பாபா

Saturday, 24 July 2010

தெய்வத்தின் குரல்

"தீப்பெட்டியில் ஒரே ஒரு குச்சி நாம் ஒளி பெறுவதற்கு போதுமானது, இது போன்றே நாம் ஆன்மீக ஒளி பெற நாம் நன்றாக புரிந்து கொண்ட ஏதாவது ஒரு கொள்கையை அல்லது போதனையை தீவிரமாக பயின்றால் அல்லது நடைமுறைப் படுத்தினாலே போதும்" - பாபா

Wednesday, 21 July 2010

தெய்வத்தின் குரல்

"யார் ஒருவரும் தன் இயற்கையான குணங்களை விட்டுவிடும் சக்தி கொண்டவர் அல்ல. அது கடவுளின் அருளினாலேயே உண்டாகிறது. அந்த அருளைப் பெற ஜபமும் தியானமும் உதவும். இந்த உண்மையை உணர்ந்தபிறகே அது தன் உணர்வில் இருந்து நழுவாமல் இருக்கும். அதற்கு உதவும் நல் ஒழுக்கங்கள் ஜபமும் தியானமும் ஆகும். இது முதலில் தெளிவாக உணரப்பட வேண்டும். எல்லோராலும் பிரகிருதி அளிக்கும் குணங்களை கட்டுப்படுத்த முடியாது. அந்த சக்தி பிரகிருதியை தங்கள் கைக்குள் அடக்கி வைத்து அவரது கட்டளைக்கு கீழ்ப்படியுமாறு வைத்திருப்போருக்கே கிடைக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் பிரகிருதியே அனைத்திற்கும் ஆதாரம். அதுவே படைத்தல் மற்றும் இருத்தல் ஆகியவற்றின் அடிப்படை. ஆண்கள், பெண்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும், அதாவது பார்க்கக்கூடிய யாவையும் பிரகிருதியிடம் இருந்து பிரிக்க முடியாதவை." - பாபா

Tuesday, 22 June 2010

சாயி பற்றி சாயி
"இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் யார் முயன்றாலும், எவ்விதம் ஆராய்ந்தாலும், எத்தனை காலம் தவமிருந்தாலும், என் உண்மை தத்துவம் மக்களுக்கு விளங்காது" என்று தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் சுவாமி தன் 14 ஆவது வயதிலேயே குறிப்பிட்டுள்ளார். ஆயினும் ஆங்காங்கு சுவாமி அருளியிருக்கும்,அருளிவரும் சொற்பொழிவுகளுள் தன் ஸ்வரூபம் குறித்து விளக்கம் தந்ததுண்டு. அதிலிருந்து வெளிவந்த விபரங்களில் சிலவற்றினை அடியிற்காணலாம். பெயர்: "எனகென்று தனிப்பெயர் ஏதுமில்லை. எல்லாப் பெயர்களுமே என்னுடயவைதான். எந்த ஒரு பெயரால் அழைத்தாலும் நான் உடனே பதிலளிப்பேன். என்னை நீங்கள் அழைக்காவிடினும் கூட உங்களுக்கு நான் தேவைப்பட்டால் உடனே ஓடிவருவேன்." வயது: "எனக்கு வயதென்பதே இல்லை (வயதிற்கப்பாற்ப்பட்டவன் நான்). என்னுடைய விளையாட்டிற்காக (லீலைக்காக) இந்த பிரபஞ்சத்தை நான் படைத்ததற்கு முன் என்னை புரிந்துகொள்ள எவரும் இல்லை. 'எகோ ஹம் பஹுஷ்யாம்' - நான் ஒருவனே பற்பல தோற்றங்களில் காணப்படுகிறேன்." பெற்றோர்கள்: "என்னுடைய பிறப்பு கர்மத்தின் விளைவாக ஏற்ப்பட்டதல்ல (கர்ம ஜென்மமல்ல). 'ஆத்மானம் ஸ்ருஜாம்யஹம்' - என்னை நானே தோற்றுவிக்கச் சங்கல்ப்பம் கொண்டேன். என்னுடைய பெற்றோர்கள் என்ற சிறப்பான உரிமையை பெரும் தகுதியுல்லோரை நான் தேர்ந்தெடுத்தேன்." நான் குடியிருக்கும் வீடு: "நான் எல்லா இதயங்களிலும் குடி கொண்டுள்ளேன் ('சர்வபூத அந்தராத்மா',ஹ்ருதயவாசி). எல்லா உயிரினங்களுக்குள்ளும் இருப்பவன் நான். உன்னுடைய இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி அதை பிரசாந்தி நிலையமாக ஆக்கி விட்டாயானால் நான் அங்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாசம் செய்யத் தொடங்குவேன். இங்கேயுள்ள பிரசாந்தி நிலையம் பக்தர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் இதயமே எனக்கான பிரசாந்தி நிலையம்." சொத்து: "நீங்களே எனது சொத்து அல்லது பொக்கிஷம், நிதி எல்லாம். என்னை நீங்கள் ஏற்காவிடினும் மறுத்தாலும், நான் உங்களுடைய சொத்து (நேனு நீவாடு). என்னுடைய சக்திஎல்லாம் உங்களுடைய உபயோகத்திற்காகவேதான்." தொழில்: "பக்தர்களுக்கு புக்தி (நல்வாழ்வு) முக்தி (விடுதலை பேறு) அளிப்பதே எனது தொழில். பக்தர்கள் யார்? இன்பதுன்பங்களை 'எனையாளும் ஈசன் செயல்' என்று என் ஆதீனமாக்கிச் சமநிலையான மனத்துடன் ஏற்பவர்களே எனது பக்தர்கள்." தகுதி: "அன்பு ஒன்றே." பொழுதுபோக்குப் பணி: "பக்தர்களை ரக்ஷிப்பதுடன் மட்டுமே நான் திருப்தியடைந்து விடுவதில்லை. மனித உள்ளங்களில் 'பக்தி' உணர்வை வித்திட்டு,வளர்த்து,அதை நன்கு செழிக்கச் செய்வதிலேயே நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இதனால் அவர்களை பிறப்பெனும் சுழலிளிருந்து விடுவிக்க வழி வகுக்கிறேன். பக்தி உணர்வைப்பெருக்கி அவர்களை ரக்சிக்கிறேன்." (தொகுப்பு-ஸ்ரீ. என். கஸ்தூரி அவர்கள். தமிழ் சநாதன சாரதி, பகவான் பாபாவின் 60ஆவது அவதார தின சிறப்பு மலரிலிருந்து.)

Monday, 4 January 2010

புத்தாண்டு பொன்மொழி

பகவான் பாபாவின் புத்தாண்டு பொன் மொழி " என்று உன் இதயத்தில் புதிய,புனித எண்ணங்கள் தோன்றுகிறதோ அதுவே புத்தாண்டு தினமாகும்"