தீயதை ஒழிக்க நன்மையை பெருக்கு!
த்ரயி பிருந்தாவனில் மாணவர்களுடன் பகவான்; அப்போது கையில் ஒரு கடித்துடன் ஒரு மாணவன் ஸ்வாமியிடம் பல்வேறு தீய எண்ணங்கள் அவனை தொல்லை செய்வதாக கூறினான். அவனது பிரச்சனைகள் அனைத்தையும் அக்கடிதத்தில் எழுதி இருந்தான். ஸ்வாமி ஒரு வார்த்தையும் உரைக்கவில்லை. வெறுமே அக் கடித்ததை வாங்கி அதனை திறந்தார், பின் அதனை சுருட்டி மீண்டும் அதனை அம்மாணவனிடம் கொடுத்தார்.
ஸ்வாமி அம்மாணவனிடம் சுருட்டிய அக்கடிதத்தை திறக்க சொன்னார், அம்மாணவனும் முயற்சித்தான்.
நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். சுருட்டிய நிலையில் இருக்கும் புதிய காலண்டரை திறக்கும் போது அது நேராகாமல் மீண்டும் சுருட்டிக் கொள்ளும்.
அம்மாணவன் இரண்டு மூன்று முறை முயற்சித்தும் பயனில்லை. பகவான் அக்கடித்ததை திரும்பப் பெற்றுக்கொண்டு அதனை மறுபக்கமாக சுருட்டினார். இப்போது அக்கடிதம் நேராகியது! பின்னர் பகவான் அம்மாணவனிடம், "கட்டுபாடில்லா, தவறான எண்ணங்களுடன் போராடுவதற்கு பதிலாக நற்காரியங்களை செய்ய துவங்கு!" என்றுரைத்தார்.
ஆதாரம்: 2012ல் நடைபெற்ற கோடை பயிற்சி முகாமில் திரு. K. M. கணேஷ் அவர்கள் உரையில் இருந்து.
No comments:
Post a Comment