Sunday, 3 January 2021

ஏன் ஒருவர் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்?

ஏன் ஒருவர் மாமிசம் உண்பதை கைவிட வேண்டும்? | அருளமுத துளி | நவம்பர் 23, 1994


“தற்போது, தன்னை பக்தனாக கூறிக்கொள்ளும் எவராயினும் மாமிச உணவை கட்டாயம் கைவிட வேண்டும். 

காரணம் என்ன?

மிருகங்களின் மாமிசம் உங்களில் மிருக குணத்தையே வளர்க்கும். 

'உணவு எப்படியோ அப்படியே மனம்', 'உணவை சார்ந்தே ஏப்பம்' என சொல்வார்கள்.

மாம்பழத்தை உண்டால் வெள்ளரி ஏப்பம் வராது.

மிருக மாமிசத்தை உண்ணும்போது, உங்களில் மிருகத் தன்மையே மேலும் வளரும்.

அதுமட்டுமல்ல..

நம்மில் இருக்கும் அதே பஞ்ச பூதங்களை தன்னில் கொண்டிருக்கும் மிருகங்களை கொல்வது எத்தனை பாபம்? உன்னில் பஞ்ச பூதங்கள் இருக்கிறது. அதே பஞ்ச பூதங்களைக் கொண்ட மற்றொரு உயிரைக் கொல்வது பாபமே.

அப்படிப்பட்ட பாவத்தை செய்வதாலேயே எல்லா வகையான கவலைகள் ஏற்படுகின்றன.

எனவே, உண்மையான பக்தர்கள், பக்தர்களாக ஆக விரும்புபவர்கள் மாமிச உணவை கைவிட வேண்டும். 

'நான் சாயி பக்தன்', 'நான் ராம பக்தன்' எனக் கூறிவிட்டு சிக்கனை ஒரு வெட்டு வெட்டுகிறாய்! நீ எப்படி பக்தனாவாய்? நீ எப்படி உண்மையான பக்தனாவாய்? இல்லை நீ ஒரு ராட்சசனே. அப்படிப்பட்ட மனிதன் இறைவனின் அருளை எப்போதும் பெற மாட்டான். 

எனவே, ஸ்வாமியின் மீது பக்தி கொண்டவர்கள், அவர்கள் பாரதீயர்களோ, வெளி தேசத்தவர்களோ, அவர்கள் நிச்சயம் அசைவ உணவை விட்டுவிட வேண்டும்!"
________

மேற்கண்ட அருளுரையை பகவானின் தெய்வீக குரலில் கேட்க: https://youtu.be/UDxhhcm_6gk

நன்றி: Sri Sathya Sai Speaks Official, Youtube Channel

No comments:

Post a Comment