காலாதீதாய நம:
ஓம் ஸ்ரீ ஸாயி அதீதாய நம காலாதீதாய நம என்று அவரது அஷ்டோத்தரம் போற்றுவது போல பாபா காலம் இடம் ஆகியவற்றை கடந்தவர் என்று அறிவதற்கு ஒருவர் _Master of time and space (my Baba and I)_ என்னும் தலைப்பில் ஜான் ஹிஸ்லாப் என்பவர் எழுதியுள்ளவற்றை படிக்க வேண்டும்.
~~~~
1973ஆம் ஆண்டு ஓர் நாள் டாக்டர் ஜான் ஹிஸ்லாப் பயணம் செய்து கொண்டிருந்த கார் எதிரில் வேகமாக வந்த கார் ஒன்றுடன் மோதி நொறுங்கிப் போகும் நிலையில் இருந்தது. இறுதி வினாடிகளில் முயற்சியால் தவிர்ப்பதற்குரிய வாய்ப்பு எதுவும், அங்கு இருக்கவில்லை. ஏனென்றால் அந்த இருவழிச்சாலையில் ஒரு கற்குவியல் இருந்தது, ஒரு பஸ் வேறு போய் கொண்டுடிருந்தது! ஆனாலும் இடப்பக்கம் ஒரு மோதல் நடக்கவில்லை. இரண்டு கார்களும் அவைகள் வந்து கொண்டிருந்த திசைகளில் தொடர்ந்து பயணித்தன. ஜேக் ஹில்டன் என்பவருக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதை 1990-ல் வெளியான ‘ஸாயி வந்தனா‘ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(திரு. கிருஷ்ணன் JS அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)
No comments:
Post a Comment