Thursday, 4 April 2019

செயலின் விளைவு


செயலின் விளைவு! 

"கண்ணன் கீதையில் 'பலனை மறுதலித்து விடு' (மா பலேஷு) என்று சொல்லியிருக்கிறான். அதாவது: காரியம் என்னவோ பலனைக் கொடுக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்தக் காரியத்தைச் செய்பவன் பலனை விரும்பக் கூடாது. அல்லது அந்தப் பலனை கருத்திற்கொண்டு அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது. செய்பவனுக்குப் பலனில் அதிகாரம் கிடையாது.. என்று கூறுவது பகவானின் நோக்கமாக இருந்தால் 'பலன்களில் அதிகாரம் இல்லை' (ந பலேஷு) என்று சொல்லியிருப்பான். ஆகையால் செயலிலிருந்து நீ ஒதுங்கி விடுவாயானால் பகவானுடைய கட்டளையை மீறியவனாகி விடுவாய். அது மிகவும் தீங்கை விளைவிக்கும் தவறாகும்.

காரியம் செய்வதற்கு மனிதன் உரிமை பெற்றவனாக இருக்கும் போது, பலனிலும் அவனுக்கு உரிமை இருக்கிறது. இதை ஒருவரும் மறுக்க முடியாது: அவனுடைய உரிமையை மறுக்கவும் முடியாது. ஆனால், அவனுடைய சொந்த விருப்பத்தின் பேரில் சொந்தமாக முடிவெடுத்து அதன் பலனால் எந்த விதமாகவும் பாதிக்கப்படுவதற்கு அவன் மறுக்கலாம். அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி, கீதை இங்கு வழி காட்டுகிறது:- “செய்!...விளைவுகளை ஏற்க மறுத்து விடு!” 

நீ செய்கின்ற செயல்களின் லாபங்களை விரும்புதல் ரஜோ குணத்தின் அடையாளமாகும். லாபம் ஒன்றுமில்லையென்பதால் ஒன்றுமே செய்யாமல் இருந்து விடுவது தமோ குணத்தின் அடையாளம். காரியங்களைச் செய்வதில் ஈடுபடுவது, அதனால் விளையும் பலன்கள் என்ன என்று தெரிந்தும் அவற்றில்; பற்றுவைக்காமல் அவற்றைப்பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, இவை ஸத்வ குணத்தின் அடையாளமாகும்."

- பகவான் பாபா, (கீதா வாஹினி அத்யாயாம் 5)

Wednesday, 27 March 2019

சத்ய சாயி பாபாவின் சித்ராவதி லீலைகள்

சத்ய சாயி பாபாவின் சித்ராவதி லீலைகள்

💦 சத்ய சாய் பாபாவின் சித்ராவதி நாட்கள்(1942-1953)

பகவான் சித்திரவதி நதிக்கரையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். ஆரம்ப காலகட்டங்களில் ஒவ்வொரு சாயங்காலமும் பக்தர்களை அழைத்துக்கொண்டு பகவான் சித்ராவதி நதிக்கரைக்கு  அழைத்துச் செல்வார்.  பின்பு பக்தர்களிடமே தான் அமரவேண்டிய இடத்தை காண்பிக்குமாறு கேட்பார்.  அவர்களோ சுவாமி அங்கு அமரலாம் என்று ஒரு இடத்தை  காண்பிப்பார்கள்.  அவர்கள் காண்பிக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு பஜனைகள் மற்றும் போதனைகளை செய்வார். பின்னர் அவர்களிடம் தனிப்பட்ட முறையில் என்ன வேண்டும் என்று கேட்பார். ஒருவர், சுவாமி எனக்கு சுடச்சுட ஜிலேபி வேண்டும் என்பார்,  இன்னொருவரோ, சுவாமி எனக்கு மைசூர்பாக் வேண்டும் என்பார், மற்றொருவர், சுவாமி எனக்கு மசால்தோசை வேண்டும் என்பார்.

அப்படி பக்தர்கள் என்னென்ன கேட்கின்றனரோ அவற்றை  ஒன்றன் பின் ஒன்றாக வரவழைத்து கொடுப்பார். அதுவும் எப்படி?  முதலில் பகவான் நதிக்கரையில் உள்ள மணலை சிறு குன்று போல் செய்து கொள்வார்.  பின்பு அந்த மணல் குன்றுக்குள் கையை உள்ளே  நுழைப்பார். பின்பு என்ன... சுடச்சுட நெய் வடியும்  ஜிலேபியும், மசால் தோசையையும் ஒரு துளி மண்ணில்லாமல் எடுத்துக் கொடுப்பார்!

 அவ்வாறு உண்டவர்கள் நாங்கள் அதுபோன்று ஒரு சுவையை எங்கள் வாழ்நாளிலே ருசித்தது  இல்லை என்றனர். அப்படி பகவான் வரவழைத்துக் கொடுக்கும் உணவுகள் மிகவும் சூடாக இருக்கும். அதாவது,  அடுப்பில் இருந்து செய்து கொடுத்தால் எந்த சூடு இருக்குமோ அந்த சூட்டில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

ஒரு வித்தியாசமான சம்பவம் ஒன்றும் நடந்தது.. சுவாமி ஒரு பெண்மணியை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பெண்மணியோ தன் கணவர் இறந்து பல  வருடங்கள் (அதாவது பாபா பிறப்பதற்கு முன்பு) ஆகிவிட்டது, அவரின் நினைவாக அவரின் புகைப்படம் என்னிடம் எதுவும் இல்லை அதனால் அவரின் புகைப்படத்தை எனக்கு வரவழைத்து தாருங்கள் என்று கேட்க, பகவான் மண்ணிலிருந்து அவளும் அவர் கணவரும் சேர்ந்து இருக்குமாறு ஒரு புகைப்படத்தை வரவழைத்துக் கொடுத்தார்.

இப்படி ஒரு முறையோ இரு முறையோ அல்ல பலமுறை பகவான் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.  இன்றும் கூட  சாயி பக்தர்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் அந்த சித்ராவதி  நதியின் மணற்பரப்பின் மேல் அமர்ந்துகொண்டு பஜனைகள் செய்கின்றனர்.  பகவான் நடந்து, அமர்ந்து, சென்ற அந்த இடத்தை ஒரு புண்ணிய இடமாக கருதுகின்றனர்.

(திரு. JS கிருஷ்ணன் அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)

காலாதீதாய நம:

காலாதீதாய நம:

ஓம் ஸ்ரீ ஸாயி அதீதாய நம காலாதீதாய நம என்று அவரது அஷ்டோத்தரம் போற்றுவது போல பாபா காலம் இடம் ஆகியவற்றை கடந்தவர் என்று அறிவதற்கு ஒருவர் _Master of time and space (my Baba and I)_  என்னும் தலைப்பில் ஜான் ஹிஸ்லாப் என்பவர் எழுதியுள்ளவற்றை படிக்க வேண்டும்.
~~~~
1973ஆம் ஆண்டு ஓர் நாள் டாக்டர் ஜான் ஹிஸ்லாப் பயணம் செய்து கொண்டிருந்த கார் எதிரில் வேகமாக வந்த கார் ஒன்றுடன் மோதி நொறுங்கிப் போகும் நிலையில் இருந்தது. இறுதி வினாடிகளில் முயற்சியால் தவிர்ப்பதற்குரிய வாய்ப்பு எதுவும், அங்கு இருக்கவில்லை. ஏனென்றால் அந்த இருவழிச்சாலையில் ஒரு கற்குவியல் இருந்தது, ஒரு பஸ் வேறு போய் கொண்டுடிருந்தது! ஆனாலும் இடப்பக்கம் ஒரு மோதல் நடக்கவில்லை. இரண்டு கார்களும் அவைகள் வந்து கொண்டிருந்த திசைகளில் தொடர்ந்து பயணித்தன. ஜேக் ஹில்டன் என்பவருக்கும் இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதை 1990-ல் வெளியான ‘ஸாயி வந்தனா‘ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(திரு. கிருஷ்ணன் JS அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)

மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள்* 🌺

🌺 மறக்க வேண்டியவைகளை மறந்து இறைவனை அடையுங்கள் 🌺

_(அனைத்து இந்திய ஶ்ரீ சத்தியசாயி சேவை நிறுவனங்களின் தலைவா் திரு. நிமிஷ் பாண்ட்யா அவா்கள் பெற்ற நோ்முக பேட்டியிலிருந்து)_
----------------------------------------------------------

எனது தந்தை ஒரு நுண்ணறிவுள்ள வழக்கறிஞராக இருந்தவா். விநோதமான நினைவு ஆற்றல் பெற்றவா். ஒருநாள் பிரசாந்தி மந்திரின் தாழ்வாரத்தில் அமா்ந்திருந்த போது ஸ்வாமி அருகே வந்து ஹே பாண்ட்யா உனக்கு என்ன வேண்டுமென்று வினவினாா். எனது தந்தையோ உண்மையாக எதனையும் விரும்பவில்லை. ஏனெனில் அவரது வாழ்வில் அனைத்தும் பெற்றிருந்தாா். எனவேஅவா் எதனையும் கேட்கவில்லை. ஆயினும் அவா் புத்திசாலித்தனத்துடன்விழிப்புணா்வும் கூடியது இது என அவருள் நினைத்து அவா் கூறினாா். ஸ்வாமி எனக்கு மோக்ஷம் வேண்டுமென.நல்லது என்னுடன் வா உள்ளே செல்லலாம் என ஸ்வாமி கூறினாா்.

இவ்வாறு ஸ்வாமி கூறிய பின்னா் ஸ்வாமி வழிகாட்டிட நோ்முக பேட்டி அறைக்குள் நுழைந்தோம். எனது தந்தை அதீதமான  மகிழ்ச்சியுடன் அவருள் எண்ணிணாா். நான் எனது மோக்ஷத்தை நோ்முக பேட்டி அறையினுள் பெறப்போகிறேன் என்று.

ஸ்வாமி அவரை அமரவைத்து என்னிடம் உனது பெயா் கூறு என்றாா்.
எனது தந்தை எங்கு பிறந்தாா்.எனது தந்தையின் தந்தை, அன்னை மற்றும் தந்தையின் மனைவியின் பெயா், மகன்கள் முதலியோா்பற்றி அநேகவிதமான கேள்விகளை கேள்வி மேல் கேள்வியாய் எழுப்பினாா் அதற்கான விடைகளுடன்.100, 200, 300 கேள்விகள்வரை கேட்கப்பட்டன.

அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி தனது நினைவாற்றலின் சக்தியினை எண்ணி தனக்குள் எனது தந்தை பெருமையடைந்தாா். முடிவாக ஸ்வாமி கூறினாா். இத்தனையிலும் உன் மறவாத தன்மை இருக்கும்போது உனது விடுதலையினை எவ்வாறு பெறுவாய்

*"மோக்ஷம் வேண்டுமெனில் உபயோகமற்றதை நீ மறந்திட வேண்டும், உனது மூளையில் உள்ள தேவையற்ற விஷயங்களை மறந்து காலியாக வைத்திருக்க வேண்டும்."*

கடவுள் மிக எளிமையானவா். ஸ்வாமி மிகமிக எளிய அவதாரம் என்று அவர் எங்களிடம் கூறினாா். நீங்கள்  இவைகளை மறந்திட  முடிந்து இந்த நிமிடங்களில் தடைகள்இன்றி வாழந்திடின் பின்னா் நீங்கள் ஒருமகிழ்ச்சியான  நபராக ஆவீா்கள். உங்களது சுமைகளை சுமந்திருப்பின் நீங்கள் ஒரு இறந்த நபருக்கு ஒப்பானவா் ஆவீா்கள்.

(திரு. கிருஷ்ணன்JS அவர்களின் Whatsapp பதிவில் இருந்து)