சாயி அனுபவங்கள்
நகர்ந்த அடைப்பு; நழுவிய கத்தி!
"ஸ்ரீ சத்ய சாயி பாபா, பணக்காரர்களின் சுவாமி! பென்ஸ் காரில் வலம் வருபவர். அவர் ஏழை எளியவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்!" என்றோர் அப்பிராயம் பரவலாக உண்டு! மாறாக, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே.ராஜேந்திரனின் அனுபவம் இது! (அனுராதா சேகர் அவர்கள் தொகுத்த 'பகவான் பாபா' (கல்கி வெளியீடு) என்ற நூலிலிருந்து.)
![]() |
அன்பின் திருவுரு |
"பரம்பரையாக, சவரத்தொழில் செய்யும் மருத்துவர் குலத்தைச் சேர்ந்தவன் நான். கள்ளக்குறிச்சி, காந்தி சாலையில்'அழகு ஹேர் கட்டிங்'சலூன் வைத்திருக்கிறேன்.
மிக எளிமையான குடும்பம். என்னுடைய பத்து வயதிலிருந்தே அப்பாவுக்கு உதவியாக வந்து விட்டேன். 1990 -ம் ஆண்டு, ஒரு சிறிய முடிதிருத்தும் நிலையத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. அப்புறம் என்ன காரணமோ தெரியவில்லை. தொழிலில் பயங்கர நஷ்டம். அப்போது என் வாடிக்கையாளரான சாயி பாபா பக்தர் ஒருவர், பாபாவின் படம் ஒன்றைத் தந்து, அவரது மகிமைகளைப் பற்றிக் கூறினார்.
எனக்கு அவரைக் கடவுளாக ஏற்று, கும்பிடுவதில் விருப்பமில்லை. கடையிலேயே ஓர் ஓரமாக வைத்துவிட்டேன். மறுபடியும் என் கடைக்கு வந்த அந்த பக்தர், பாபாவை பூஜிகுமாறு கேட்டுக்கொண்டார். அப்போதும் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை!
ஒருநாள் திடீரென்று, என் வலது கையை மேலே தூக்கவே முடியவில்லை! முடிதிருத்தும் தொழிலாளியான எனக்குக் கைகள்தானே பிரதானம்? அதுவே செயலிழந்தால்? பல மருத்துவ நிபுணர்களிடம் காட்டினேன். நோய் குணமாகவில்லை!சேலத்திலிருந்த மருத்துவர் ஒருவர், என்னைத் தீரப் பரிசோதித்துவிட்டு, "நரம்புல ரத்த அடைப்பு ஏற்பட்டிருக்குப்பா! ஆபரேசன் செஞ்சாத்தான் சரியாகும். குறைந்தது நான்கு லட்சமாவது செலவாகும்" என்று சொல்லிவிட்டார்.
குடும்பம் நடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில், நன்கு லட்ச ரூபாய்க்கு நான் என்ன செய்வேன்? இடிந்துபோன நான், அவரிடமே வேறு வழி ஏதேனும் இருகிறதா என்று மன்றாடினேன். அவர், 'ஒயிட் பீல்ட் சூப்பர் ஸ்பெசாலிடி' (பகவான் பாபாவின் மத்திய அறக்கட்டளையால் துவக்கி நிர்வகிக்கப்படும் சிறப்பு இலவச மருத்துவமனை) மருத்துவமனையில் பணிபுரியும் அவரது நண்பர் டாக்டர் ஹெக்டேவுக்கு ஒரு கடிதம் கொடுத்தார்.
ஸ்ரீ சத்ய சாயி அதி நவீன மருத்துவமனை, ஒயிட் பீல்ட், பெங்களூர்
மருத்துவமனையின் வரவேற்பு பகுதி
![]() |
டாக்டர் ஹெக்டே |
அடுத்த பஸ்சிலேயே, ஒயிட் பீல்ட் மருதுவமனக்குப் புறப்பட்டேன். மருத்துவமனையின் சுத்தமும், பகவான் பாபாவின் திருவுருவப்படமும், அங்கு தவழும் அன்பும் அமைதியும் எனக்குத் தெம்பூட்டின. டாக்டர் ஹெக்டே, அந்தக் கடிதத்தைப் பார்த்தார். என்னிடம் அன்பாக பேசி, எம்.ஆர் .ஐ., சி.டி. ஸ்கேன் எல்லாவற்றிற்கும் அனுப்பினார்.
பரிசோதனை முடிவுகள் வந்தன. ஆபரேசன் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தார். அந்த சமயத்தில், எமர்ஜென்சி அறுவை சிகிச்சைகள் அடுத்தடுத்து செய்யவேண்டி இருந்ததால், எனக்கு ஆபரேசன் நடக்கவில்லை. திரும்பி ஓர் வந்தேன்.
மறுபடியும் பதினைந்து நாட்கள் கழித்து சென்றேன். அப்போதும் என் முறை வரவில்லை. இது போல நான்கைந்து முறை, நான் போவதும், ஆபரேசன் செய்துகொள்ளாமல் நொந்தபடி வீடு திரும்புவதுமாகக் கழிந்தது.
ஒரு நாள் இரவு, தூக்கமே வரவில்லை! பகவானிடம் மனம் உருகிப் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தவன், எப்போது தூங்கினேனோ தெரியவில்லை. அதிகாலையில், தெளிவாக முதியவர் குரல் ஒன்று என்னிடம், "உனக்கு 'பெட் அலாட்' ஆகிவிட்டது. ஆபரேசன் செய்ய நாள் குறித்தாகிவிட்டது.உடனே ஆஸ்பத்திரிக்குப் போ" என்று சொன்னது.
சிறிது கூட மனதில் குழப்பமில்லை. பகவான்தான் சொல்லியிருக்கிறார் என்று ஒயிட் பீல்ட்க்கு கிளம்பினேன்.
"ஏதோ ஒரு குரல் சொன்னது என்று நம்பிக் கிளம்புகிறாயே, உனக்கென்ன பைத்தியமா? மறுபடி ஏமாந்து திரும்பி வரப்போகிறாய்!" என்றனர் என் உறவினர்கள். அனால் எனக்கு இம்மியளவு கூட சந்தேகமில்லை.
ஒயிட் பீல்ட் மருத்துவமனையில் நுழைந்ததுமே, வாசலிலிருந்த சேவாதளத் தொண்டர் ஒருவர், "கள்ளக்குறிச்சி ராஜேந்திரன், உங்களுக்கு படுக்கை அலாட் ஆகிவிட்டது. ஆபரேசனுக்கு தேதி குறித்தாயிற்று " என்றார்.
மருத்துவமனையிலிருந்து எந்தவிதமான கடிதமோ, போனோ எனக்கு வரவில்லை. ஆனாலும், குறித்த நாளில் என்னை சேரச் சொன்ன பிகவானின் கருணையை என்ன என்பது?
முடிதிருத்தும் சாதாரண மனிதன் நான். என் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து, என் நோயை தீர்பதற்கு எப்படியெல்லாம் வழிகாட்டுகிறார்! எனக்காகப் படுக்கையும் காலைச் சிற்றுண்டியும் தயாராக இருந்தது. நான் நெகிழ்ந்து போனேன்.
குறித்த நாளில் எனக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடாயிற்று. நான் "சாயிராம் சாயிராம்" என்று ஓயாமல் ஜெபித்துக்கொண்டிருந்தேன். டாக்டர் ஹெக்டேதான் ஆபரேசன் செய்தார். கழுத்தின் பின்புறமாக கத்தியை வைத்தார். அப்போது நழுவி கீழே விழுந்தது. உடனே டாக்டர் உஷாராகிவிட்டார். எதிரே மாட்டியிருந்த ஸ்ரீ பகவானின் படத்தைப் பார்த்து வணங்கிவிட்டு, "எனக்கு என்னவோ சந்தேகமாக உள்ளது. மறுபடி ஸ்கேன் பண்ணுங்க!" என்றார். உடனே ஸ்கேன் செய்து பார்த்தார்கள். அவரது சந்தேகம் நிஜம்தான். ரத்த அடைப்பு மெல்ல வேறு இடத்திற்கு நகர்ந்திருந்தது.
![]() |
ஆபரேசன் நடைபெறுகிறது (மாதிரி படம்) |
ஒன்பது மணி நேர சிக்கலான ஆபரேசன் நடந்தது. எனக்கு நினைவு திரும்பியது.
"ராஜேந்திரன்..ஆபரேசன் சக்சஸ்...இனி பயப்பட வேண்டாம்" என்று மகிழ்ச்சியோடு சொன்னது காதில் விழுந்தது. நான் கண்களைத் திறக்க முயற்சித்தபோது, ஸ்ரீ சத்யசாயி பாபாவின் உருவம், தாய்பூனையாக மாறி, பூனைக் குட்டியாக மாறியிருந்த என் கழுத்தைக் கவ்விக்கொண்டு போவது போன்ற காட்சியைக் கண்டேன்.
![]() |
தன்னார்வ தொண்டரின் சேவை (மாதிரி படம்) |
மருத்துவர்களின் அன்பான கவனிப்பிலும், சேவா தளத் தொண்டர்களின் உபசரிப்பிலும் பூரண குணமாகி, கள்ளக்குறிச்சி திரும்பினேன். ஆனாலும் எனக்குக் கடுமையான வலி இருந்தது. பேச்சும் சுத்தமாக வரவில்லை. பாபாவை நினைத்துக் கொண்டே, அழுகையுடன் படுத்திருந்தேன். அப்போது புட்டபர்த்தி சென்று வந்த சாயி பக்தர் ஒருவர், சிறிது கற்பூர மிட்டாயும் விபூதியும் கொடுத்தார். எதுவும் சாப்பிட முடியாமல் படுத்திருந்த நான், அந்தப் பிரசாதத்தை மட்டும் சாப்பிட்டேன். இரவு பன்னிரண்டு மணிக்கு "அப்பா..அம்மா!" என்று சத்தம் போட்டுக் கத்தியிருக்கிறேன். அவ்வளவுதான்! என் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் "சாயிராம்...சாயிராம்!" என்று ஆனந்தமாகச் சொல்ல ஆரம்பித்தனர்.
![]() |
சாயி தரிசனம் |
அறுவை சிகிச்சை நடந்த பதினைந்தாம் நாள், என்னை ஆட்கொண்ட பாக்வானத் தரிசிக்க புட்டபர்த்தி சென்றேன். கடல் அலை போலத் திரண்டிருந்த கும்பலில், என்னை மட்டும் எப்படியோ முன் வரிசைக்கு அழைத்துப் போனார் சேவா தளத் தொண்டர் ஒருவர். இருபது அடி தூரத்தில் பகவான் தரிசனம் தந்தார். கண் கொள்ளா தரிசனம்.
![]() |
ஆசிர்வாதம் |
"பகவானே! என்னைக் காப்பாற்றி விட்டீர்கள்...என்னை ஆசீர்வதியுங்கள்!" என்று நா தழுதழுக்க அழுதேன். திரும்பிப் பார்த்து, புன்முறுவலுடன் கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்தார். அந்த அழகு திருவுருவத்தை அப்படியே நெஞ்சில் தங்கிக் கொண்டு, கள்ளகுறிச்சி வந்து, தொழிலைத் தொடர்ந்தேன்.
![]() |
சனாதன சாரதி மாத இதழ் |
ஆறு வருடங்களாக நான் அனுபவிக்கிற இந்த ஆனந்தத்தை, அமைதியை, மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில், என் முடிதிருத்தும் நிலையத்தை, ஒரு பிரசாந்தி நிலையமாக மாற்றி இருக்கிறேன். பார்பதற்கு பகவானின் திருஉருவப் படங்கள்...கேட்பதற்கு பஜனைப் பாடல்கள், படிப்பதற்கு 'சானாதன சாரதி' என்று என்னுடைய முடிதிருத்தகம், மக்களின் மனக்கோணல்களையும் திருத்தும் நிலையமாகத் திகழ்கிறது.
![]() |
நாராயண சேவை-அன்னதானம் (மாதிரி படம்) |
பல லட்ச ரூபாய் செலவாகும் ஆபரேசனை, ஒரு பைசா கூட வாங்காமல் இலவசமாக செய்து, என் உயிரைக் காப்பாற்றிய சாயிநாதனின் புகழைப் பாடுவதைத் தவிர, வேறு எப்படி என் நன்றிக் கடனைத் தீர்ப்பேன்? அவரது பிறந்த நாளில், அன்னதானம், ஊனமுற்றோருக்கு உதவிகள் வழங்குகிறேன். வருடந்தோறும் மார்ச் மாதம் புட்டபர்த்தியில் பாதுகாப்புப் பணிகளில் தொண்டாற்றுகிறேன்.
என் மூத்த மகனும் முடி திருத்தும் கலைஞராக உள்ளான். அவனைத் தவிர, ஒரு மகனும், இரண்டு பெண்களும் உள்ளனர். அவர்களை எல்லாம் ஓரளவு கரை சேர்த்ததும், நான் புட்டபர்த்தியில் சுவாமியின் காலடியிலேயே மிச்சக்காலத்தை கழிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அங்கே வருபவர்க்கு, இலவசமாக முடிதிருத்தும் பணியைத் தொடர்ந்து செய்யவும் விருப்பமாக உள்ளேன். எல்லாம் பாபாவின் அருள். என்னை எங்கே வைக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்பது அவரது பொறுப்பு. என் பாரம் சுமப்பவர் அவர். நான் இளைப்பாறிக்கொண்டிருக்கிறேன்."
![]() |
எல்லாம் பாபாவின் அருள்! |
No comments:
Post a Comment